/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
யார் வேட்பாளர் சிவகங்கையில் சஸ்பென்ஸ்
/
யார் வேட்பாளர் சிவகங்கையில் சஸ்பென்ஸ்
ADDED : மார் 21, 2024 02:00 AM
திருப்புத்துார்: லோக்சபா தேர்தல் வேட்புமனுத்தாக்கல் துவங்கிய நிலையில் சிவகங்கை தொகுதியில் நா.த., தவிர வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதனால் 'யார் வேட்பாளர்' என சிவகங்கை வாக்காளர்களை 'சஸ்பென்ஸ்'ல் வைத்துள்ளனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் நா.த., வேட்பாளர் எழிலரசி பிரசாரத்தைத் துவக்கி விட்டார். தி.மு.க., 21 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. சிவகங்கை தொகுதி தி.மு.க., கூட்டணியில் காங்.,க்கு ஒதுக்கி விட்டது. சிட்டிங் எம்.பி., கார்த்தி தேர்தல் களத்தில் இறங்கி கூட்டணிக் கட்சியினரின் ஆதரவை கோரி வருகிறார். இருப்பினும் காங்.,ல் விருப்ப மனுக்களில் பெரும்பாலும் அவரது எதிர்ப்பாளர்களால் வழங்கப்பட்டதாக உள்ளது. இதனால் 'கார்த்தியா' அல்லது 'எதிர்தரப்பினரா' என்று பலராலும் விவாதிக்கப்படுகிறது.
பா.ஜ., தரப்பில் சிவகங்கை கூட்டணிக்கா, பா.ஜ.,விற்கா என முடிவாகவில்லை. உத்தேச வேட்பாளர் பட்டியலில் பா.ஜ., மாவட்டத் தலைவர் சத்தியநாதன் இருக்கிறார். அண்மையில் பா.ஜ.,வில் இணைந்த ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர் ராமேஸ்வரனும் ' சீட்' கேட்டுள்ளார்.
அ.தி.மு.க., முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சிவகங்கைக்கு அறிவிக்கப்படவில்லை. உத்தேச வேட்பாளராக கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் என கட்சியினர் கூறுகின்றனர்.
'யார் வேட்பாளர்' என்பது சிவகங்கை வாக்காளர்களுக்கு நேற்று வரை சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.

