/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீடு கட்டும் நிதி கையாடல் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
/
வீடு கட்டும் நிதி கையாடல் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
வீடு கட்டும் நிதி கையாடல் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
வீடு கட்டும் நிதி கையாடல் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : டிச 04, 2025 04:49 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டும் நிதியை கையாடல் செய்த தாசில்தார் உள்ளிட்ட மூவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இம்மாவட்டத்தில் 1994 பிப்ரவரி - 1996 மே வரை தமிழக அரசு இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்ட கடனாக வழங்க ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்தது. இந்தத் தொகையை 435 இலங்கை அகதிகளுக்கு வழங்கியது போல தவறாக ஆவணங்கள் தயாரித்து வேறு நபர்கள் பெயரில் கையாடல் செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அப்போது இருந்த தேவகோட்டை கோட்டாட்சியர் சையது உசேன், காரைக்குடி தாசில்தார் சர்தார், காரைக்குடி தாலுகா அலுவலக துணைதாசில்தார் இப்ராஹிம், கழனிவாசல் வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த தனசேகரன், ஒப்பந்ததாரர் கதிரேசன், இலங்கை அகதிகள் மறுவாழ்வு மைய தலைவராக இருந்த முத்து என்ற சரவணன் , மதுரை பாண்டியன் நகரை சேர்ந்த தினேஷ்குமார், திருமங்கலம் மேலகோட்டையைச் சேர்ந்த ராமர் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது சையது உசேன், இப்ராஹிம், ராமச்சந்திரன், தனசேகரன் இறந்தனர். நீதிபதி அனிதா கிறிஸ்டி விசாரித்தார். குற்றம்சாட்டப்பட்ட தாசில்தார் சர்தார், ஒப்பந்ததாரர் கதிரேசன், முத்து என்ற சரவணன் 3 பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தலா ரூ.30 ஆயிரம் அபராதமும், தினேஷ்குமார், ராமருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

