/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை
/
காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை
காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை
காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 16, 2025 11:31 PM

காரைக்குடி:காரைக்குடியில் பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காரைக்குடி பனந்தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு 1976 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை ஆன்லைனில் ஏற்றவில்லை. நிலத்திற்கு உரிய மதிப்பு கிடைக்காததால் இ - பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் இ பட்டா வழங்கவில்லை. இதனை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டது.
காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டமும் நடந்தது. அதில் பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், இ பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால் நேற்று இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் காரைக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாசில்தார் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் இ பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.