/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புளியால் பெரிய நாயகி அன்னை திருவிழா
/
புளியால் பெரிய நாயகி அன்னை திருவிழா
ADDED : ஆக 16, 2025 02:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை:தேவகோட்டை அருகே புளியால் புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்தில் நவநாள் திருவிழா 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் மாலை திருவிழா திருப்பலியும் மறையுரை நடந்தன. நிறைவு நாளன்று தேர்பவனி நடந்தது. முன்னதாக பங்கு பாதிரியார் சாமிநாதன், உதவி பங்கு பாதிரியார் பென்சிகர் முன்னிலையில் டில்லி உயர் மறை மாவட்ட பணியாளர் பாதிரியார் பிரான்சிலின், பாஸ்கர் டேவிட், மனோபிரசின் திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
பூஜைகளை தொடர்ந்து மிக்கேல் அதிதுாதர், புனித அருளானந்தர், புனித பெரிய நாயகி அன்னை திரு உருவங்கள் வண்ண விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு தனித் தனி வாகனங்களில் தேர் பவனி நடந்தது.