ADDED : ஜன 22, 2024 05:03 AM
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் அருகே கீழச்சிவல்பட்டியில் தமிழர் மன்றம் சார்பில் தமிழர் திருநாள் நிறைவு விழா நடந்தது.
கீழச்சிவல்பட்டி பாடுவார் முத்தப்பர் கோட்ட அரங்கில் நடந்த விழாவிற்கு தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். நிறைவு நாள் விழாவிற்கு ராமநாதன் தலைமை வகித்தார். நாகராஜன் முன்னிலை வகித்தார். அழகப்பன் தமிழ் வணக்கம் கூறினார். செயலர் பழனியப்பன் வரவேற்றார். இந்திய சாதனையாளர் புத்தக 2023க்கான பதக்கத்தை வென்ற சிறுவன் டி.தெய்வா வள்ளியப்பனுக்கு சான்று வழங்கி பாராட்டினர். சூரியனார் கோயில் ஆதினம் சிவாகர தேசிக சுவாமிகள் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் பற்றி சொற்பொழிவாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புராமன், செயலர்கள் விஸ்வநாதன், சீனிவாசன், சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி பங்கேற்றனர். குருவிக்கொண்டான்பட்டி, சிறுகூடல்பட்டி, பி.அழகாபுரி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. செயலர் அழகுமணிகண்டன் நன்றி கூறினார்.