/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
ADDED : நவ 25, 2024 06:31 AM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வீரையா துவக்கி வைத்தார். தமிழ்கனல், பிரபா ஆகியோர் தொழிற்சங்க பாடல் பாடினர். மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணகுமார் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்டபொருளாளர் மாரி வரவு செலவு அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சங்கர், சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, கால்நடை ஆய்வாளர் சங்க மாநில தணிக்கையாளர் ராஜாமுகமது, புள்ளியியல் துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் சரவணன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சகாயதைனேஷ், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், ஊரக வளர்ச்சித்துறைஅலுவலர்கள் சங்க மாவட்டபொருளாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செல்வராணி நிறைவுரை ஆற்றினார். கோடை மலைக்குமரன் நன்றி கூறினார். தமிழகத்தில்தொடர்ந்து நடைபெறும் கொலைகளை தடுத்து நிறுத்தவேண்டும். பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.