/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழ் வார விழா போட்டி சான்று வழங்கல்
/
தமிழ் வார விழா போட்டி சான்று வழங்கல்
ADDED : மே 06, 2025 06:51 AM
சிவகங்கை: தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித் சான்று வழங்கினார்.இப்போட்டியில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
கையெழுத்து போட்டி, அறிவியல் தமிழ், கணித தமிழ் குறித்த வினாடி வினா போட்டி, பேச்சு போட்டி, படத்தை பார்த்து கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினம், கவிதை வாசிப்பு போட்டி நடைபெற்றது.
வெற்றி பெற்ற 59 பேருக்கு பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார்.
கட்டுமான, அமைப்பு சாரா வாரியம்சார்பில் 7 பேருக்கு திருமண உதவி தொகை, 5 பேருக்கு இயற்கை மரண உதவி தொகை, மரண உதவி தொகை ஆணை என ரூ.4.10 லட்சத்திற்கான உதவி தொகைகளை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார், கலெக்டர் பி.ஏ.,க்கள் (பொது) ரங்கநாதன், (நிலம்) கீர்த்தனா மணி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி பங்கேற்றனர்.