/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் தொட்டி தி.மு.க, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
/
ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் தொட்டி தி.மு.க, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் தொட்டி தி.மு.க, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் தொட்டி தி.மு.க, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ADDED : நவ 15, 2024 06:56 AM
மானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் சோமதாஸ்,லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மேலாளர் விஜயகுமார் வரவேற்றார்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் நகராட்சி சார்பில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை, முத்துசாமி, மலைச்சாமி உள்ளிட்டோரும் அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் சோமசுந்தரம்,ருக்மணி உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்,
முத்துச்சாமி, தி.மு.க.,துணைத் தலைவர்: பெரியகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்துக்குள் சேதமடைந்த கட்டடங்களை இடித்து அகற்றாமல் இருப்பதால் வளாகப் பகுதிக்குள் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.நோயாளிகள் மருத்துவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முருகேசன், இ.கம்யூ., ஒன்றிய கவுன்சிலர்: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.ஓ., லுாயிஸ் ஜோசப் பிரகாஷ்: பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது நிதி பற்றாக்குறையினால் ஒரு சிலருக்கு பணம் வழங்க தாமதம் ஏற்பட்டது. பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணம் வழங்கப்படாமல் உள்ளது.
அண்ணாதுரை, தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகே உள்ள சாஸ்தா நகர் பகுதியில் தனியார் மதுபானக்கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பி.டி.ஓ.,சோமதாஸ்: தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சோமசுந்தரம், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்: ஒன்றிய கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடியும் நிலையில் தற்போது கடைசி கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் பதவியேற்ற 5 வருடங்களில் 20 சதவீதம் கூட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. வரும் காலங்களில் நகர்ப்புற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுவது போல் ஊரக பகுதி மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.ஓ., லூயிஸ் ஜோசப் பிரகாஷ்: நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பஞ்சவர்ணம், ஜெயலட்சுமி, ராதா, முருகவள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.