/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டீசல், காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள்-- அரசு பஸ் மோதல்: 20க்கும் மேற்பட்டோர் காயம்
/
டீசல், காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள்-- அரசு பஸ் மோதல்: 20க்கும் மேற்பட்டோர் காயம்
டீசல், காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள்-- அரசு பஸ் மோதல்: 20க்கும் மேற்பட்டோர் காயம்
டீசல், காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள்-- அரசு பஸ் மோதல்: 20க்கும் மேற்பட்டோர் காயம்
ADDED : ஏப் 23, 2025 02:48 AM

பூவந்தி:மதுரை - -சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் செம்பூர் காலனி என்ற இடத்தில் டீசல், காஸ் ஏற்றி வந்த லாரிகளுடன் அரசு பஸ் மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
மதுரையில் இருந்து சிவகங்கைக்கு டீசல் ஏற்றிய லாரியும், இளையான்குடிக்கு காஸ் ஏற்றிய டேங்கர் லாரியும் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. காஸ் லாரியை டீசல் லாரி டிரைவர் நந்தகுமார் முந்த முயன்றார். காஸ் ஏற்றிய டேங்கர் லாரியின் முன்னால் சென்ற சுற்றுலா பயணிகள் வேன் திடீரென வலதுபுறம் செம்பூர் காலனிக்கு திரும்பியது.
வேன் திரும்பியதால் எதிரே தொண்டியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சை டீசல் லாரி டிரைவர் கவனிக்கவில்லை. திடீரென எதிரே அரசு பஸ்சை கண்டவுடன் டீசல் லாரியை வலது புறம் திருப்பினார். பஸ் டிரைவரும் சமயோசிதமாக பஸ்சை வலதுபுறம் திருப்பியதால் நேருக்கு நேர் மோதாமல் டீசல் லாரியின் பக்கவாட்டில் பஸ் மோதியது. இதில் டேங்கர் லாரி சேதமடைந்து டீசல் கசிந்தது. அதே நேரம் காஸ் டேங்கர் லாரியும் பஸ் மீது லேசாக மோதி இடது புற பள்ளத்தில் இறங்கியது. டீசல் லாரி டிரைவர் நந்தகுமார் கால்கள் சிக்கி படுகாயம் அடைந்தார்.
பஸ்சில் வந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருப்புவனம், பூவந்தி, சிவகங்கையில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமுற்றவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்தை தடுக்க சிவகங்கையில் இருந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் நுரை கலந்த நீரை பீய்ச்சியடித்து சாலையில் கொட்டிய டீசலை அகற்றினர். தாசில்தார்கள் சிவராம் (சிவகங்கை) ரமேஷ் (திருப்புவனம்) சம்பவயிடத்தை பார்வையிட்டனர்.
அரசு பஸ் டிரைவர், எரிவாயு லாரி டிரைவர் ஆகியோரின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நேருக்கு நேர் மோதியிருந்தால் இரு வாகனங்களும் தீப்பிடித்திருக்கும். பூவந்தி போலீசார் விபத்திற்கு காரணமான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்தால் மதுரை -- சிவகங்கை ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பஸ்சில் மோதி சிக்கிய டீசல் லாரி இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது.