sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

/

கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு


ADDED : ஜூன் 27, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் 1,551 எக்டேரில் கோடை காலத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய 2 இடங்களில் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் 6 இடங்களில் ஏற்படுத்த நுகர்பொருள் வாணிப கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை நீரை கண்மாய்களில் ஓரளவிற்கு தேக்கி வைத்துள்ளனர். இந்த நீர் மூலம் கோடையில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். கொள்முதல் செய்வதற்காக திருமாஞ்சோலை, நெல்முடிக்கரையில் கொள்முதல் நிலையம் ஜூன் 9 முதல் செயல்படுகிறது.

கோடை பருவத்தில் 5,000 டன் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர். 2 கொள்முதல் நிலையத்தில் மட்டுமே 128 விவசாயிகளிடம் 503 டன் வரை நெல் கொள்முதல் செய்து, அவர்களுக்கான விலை சன்னரகம் குவிண்டால் (100 கிலோ) ரூ.2,450, பொது ரகம் ரூ.2,405 வழங்கப்படுகிறது.

128 விவசாயிகளுக்கு இது வரை கொள்முதல் விலையாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 21 ஆயிரத்து 540 விடுவித்துள்ளனர்.

கூடுதலாக கீழநெட்டூர், பனையூர், இடைக்காட்டூர், முத்தனேந்தல், எஸ்.ஆர்., பட்டினம், சின்ன கண்ணனுார் ஆகிய 6 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகம் எடுத்து வருகிறது.






      Dinamalar
      Follow us