/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர் திறன் மேம்பாடு பயிற்சி முகாம்
/
ஆசிரியர் திறன் மேம்பாடு பயிற்சி முகாம்
ADDED : அக் 16, 2024 04:09 AM
திருப்புத்துார் : திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிமுகாம் துவங்கியது.
ஏ.ஐ.சி.டி.இ-., பயிற்சி மற்றும் கற்றல் பிரிவான அடல் அகாடமி நிதி உதவியுடன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் 7 நாட்கள் நடைபெறும் முகாமை மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் துவக்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் குருநாதன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர்கள், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவர் குருநாதன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் இளவரசி செய்தனர்.