/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர் கூட்டணி மாநில குழு கூட்டம்
/
ஆசிரியர் கூட்டணி மாநில குழு கூட்டம்
ADDED : ஜன 13, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவிலில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். மாவட்டசெயலாளர் சகாய தைனேஷ்
வரவேற்றார். மாநில பொது செயலாளர் மயில் வேலை அறிக்கையும், மாநில பொருளாளர் கணேசன் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர்.
மாநில செயலாளர் முருகன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு டேவிட்ராஜன், சுதா, மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி, பொருளாளர் கலைசெல்வி பங்கேற்றனர். மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.