தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆசிரியர்கள் பணிநிறைவு பாராட்டு விழா   

ஆசிரியர்கள் பணிநிறைவு பாராட்டு விழா   

ஆசிரியர்கள் பணிநிறைவு பாராட்டு விழா   


UPDATED : ஜூன் 28, 2026 03:25 PM

ADDED : ஜூன் 28, 2026 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 03:25 PM ADDED : ஜூன் 28, 2026 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கையில் ஆசிரியர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை வட்டாரம் சார்பில் நடந்த விழாவிற்கு வட்டார தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

முன்னாள் மாநில செயற்குழு பெரியசாமி, முன்னாள் மாநில துணை தலைவர் கோடீஸ்வரன், முன்னாள் மாநில செயற்குழு மரியசெல்வி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணை பொது செயலாளர் ரங்கராஜன் பணிநிறைவு ஆசிரியர்களை பாராட்டினார். விழாவில் அவர் பேசியதாவது, ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை பெற்றுத்தருவதே நம் நோக்கம். பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாடு, ஊக்க ஊதிய உயர்வு, 2010 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர பாடுபடுவோம் என்றார்.

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் ஈவேரா, மாநில தலைவர் குணசேகரன், முன்னாள் பொது செயலாளர் ராஜேந்திரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகர், மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, மாநில செயற்குழு ரங்கராஜன், புரவலர் ஆறுமுகம், முன்னாள் மாநில பொதுக்குழு சாமுவேல் பங்கேற்றனர். பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் அய்யாச்சி, பாண்டியராஜன், சுசீலா, வள்ளியம்மை, அமுதவல்லி, சுந்தரவள்ளி ஏற்புரை நிகழ்த்தினர். வட்டார பொருளாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us