ADDED : செப் 05, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி லீடர்ஸ் குரூப் ஆப் ஸ்கூல் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் தினத்தை உலக சாதனையாக கொண்டாடினர்.
இதில் 1100 பள்ளி மாணவ, மாணவிகள் அவர்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் படங்கள், மற்றும் ஒரு கவிதை எழுதி கையொப்பமிட்டு ஆசிரியர்களுக்கு வழங்கினர்.
மேலும் மாணவர்கள் அனைவரும் ேஹப்பி டீச்சர்ஸ் டே வடிவில் மனித சங்கிலி போல் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
* மானாமதுரை பாபா நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா தாளாளர் கபிலன் தலைமையில் நடந்தது.
மாணவர்களுக்கு நிர்வாகி மீனாட்சி பரிசுகளை வழங்கினார்.நிறுவனர் ராஜேஸ்வரி, முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.