ADDED : செப் 25, 2024 05:14 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் செய்யப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துத்துரை வரவேற்றார். மாநில துணைத்தலைவர் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநிலப் பொருளாளர் சண்முகநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
மகளிர் அணித்தலைவி பிருந்தாரமணி, மாவட்ட தலைமைச் செயலாளர் தமிழரசன், தனியார் பள்ளி செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட துணைத் தலைவர்கள் பாண்டிக்குமார், செல்வம், கருப்பபையா, மாவட்ட இணைச் செயலாளர்கள் செல்வம், வெங்கடாசலபதி, பாக்கியம், சர்மிளாதேவி, முகமது இலியாஸ் கலந்துகொண்டனர். அமைப்புச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.