UPDATED : நவ 04, 2026 11:11 AM
ADDED : நவ 04, 2026 11:09 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டாரத் தேர்தல் நடந்தது.
தலைவராக சிலம்பாயி, துணைத் தலைவர்களாக சிவகாமி, செல்வக்குமார், சித்ரா தேவி, செயலாளராக ஞான விநாயகன், துணைச் செயலாளர்களாக இளையராஜா, செல்வி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுக்குழுவில் சிங்கம்புணரியில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் பஸ் டெப்போ அமைக்க வேண்டும், வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அலுவலக கட்டடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் புரட்சிதம்பி, செயலாளர் சகாயதைனேஸ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் பங்கேற்றனர்.
