ADDED : ஆக 06, 2025 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய தைனேஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜான்பீட்டர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராமராஜன் பங்கேற்றனர்.