ADDED : ஆக 20, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் கடைசியாக கடந்தாண்டு நவ. 19 ல் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
அதை தொடர்ந்து நடந்த வைகாசி விசாகத் திருவிழாவுக்கு பிறகு நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியலில் 14 லட்சத்து 787 ரூபாய் இருந்தது. உண்டியல் பணம் எண்ணும் பணியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வாளர் சுகன்யா, தேவஸ்தான சிரஸ்தார் சுப்பிரமணியன், கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.