/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தற்காலிக கடைகள் வியாபாரிகள் கோரிக்கை
/
தற்காலிக கடைகள் வியாபாரிகள் கோரிக்கை
ADDED : டிச 19, 2025 05:25 AM
தேவகோட்டை: தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யும் பணிக்காக பஸ் ஸ்டாண்டில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில் இடிக்கப் பட்ட பஸ் ஸ்டாண்ட் முன்பு சிலர் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே கடைகள் நடத்தி தற்போது கடைகள் இல்லாமல் இருக்கும் வியாபாரிகள் சங்க தலைவர் பெரியகருப்பன் தலைமையில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், மற்றும் துணை தலைவர் ரமேஷ் ஆகியோரிடம் தற்காலிக கடைகள் தங்களுக்கும் வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில், 35 வருடமாக கடைகள் நடத்தி வந்தோம். நகராட்சி வேண்டுகோள் படி கடைகளை காலி செய்து கொடுத்தோம்.
கடைகளுக்காக தாங்கள் கட்டிய வைப்புத் தொகை நகராட்சியிடமே உள்ளது. தற்போது பணி நடந்து வரும் பஸ் ஸ்டாண்ட் முன்பு தொடர்பு இல்லாதவர்கள் சிலர் கடைகள் நடத்தி வருகின்றனர்.
தங்களுடைய வைப்புத் தொகையை கருத்தில் கொண்டு தங்களுக்கு தற்காலிக கடைகள் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

