நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்மசாலையில் தைப்பூசத்தை முன்னிட்டு அன்னதான விழா நடந்தது.
சத்தியதர்மசாலை வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடந்து அன்னதான விழா துவங்கியது. டாக்டர்கள் செல்வமுத்துக்குமார், லாவண்யா ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். முன்னாள் வி.ஏ.ஓ. சேகர், ஆலய பாதுகாப்பு குழு மாநில செயலாளர் நாகசுந்தரம், முருகானந்தம், சின்னையா, தியாகலிங்கம், காளையப்பன் பங்கேற்றனர்.
ஏற்பாட்டினை தர்மசாலை மாவட்ட செயலாளர் நாகசுப்பிரமணியன், கொடைக்கானல் வி.ஏ.ஓ.,செல்வராஜ், முன்னாள் துணை தாசில்தார் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் செய்தனர்.

