/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தைப்பூசம் நகரத்தார் பழநி காவடி பாதயாத்திரை பிப்.4ல் துவக்கம்
/
தைப்பூசம் நகரத்தார் பழநி காவடி பாதயாத்திரை பிப்.4ல் துவக்கம்
தைப்பூசம் நகரத்தார் பழநி காவடி பாதயாத்திரை பிப்.4ல் துவக்கம்
தைப்பூசம் நகரத்தார் பழநி காவடி பாதயாத்திரை பிப்.4ல் துவக்கம்
ADDED : ஜன 25, 2025 07:05 AM
தேவகோட்டை -: இந்தாண்டு தைப்பூச விழா பழநியில் பிப். 11ம் தேதி நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேவகோட்டையில் இருந்து பல ஆண்டுகளாக நகரத்தார்காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இந்தாண்டு தைப்பூச விழாவிற்காக பாதயாத்திரையாக நேர்த்திக்கடனாக காவடி எடுத்து சென்று செலுத்த நகரத்தார் விரதம் இருந்து வருகின்றனர்.
நகரத்தார் பாதயாத்திரை காவடி பிப்.4ல் தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் இருந்து புறப்படுகிறது. முன்னதாக பிப்.2ம் தேதி தேவகோட்டை நகர பள்ளி கூடத்தில் காவடிகள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு காவடிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது.
மறுநாள் பிப்.3ம் தேதி காவடிகள் நகர்வலம் வந்து சிலம்பணி விநாயகர் கோவில் வந்தடைகிறது. மறுநாள் அதி காலை நகரத்தார் காவடிகள், முதலியார் காவடியும் கோவிலில் விநாயகருக்கும், காவடிகளுக்கும் பூஜை செய்தபின் காவடி பாதயாத்திரை புறப்படுகிறது.
முதல் நாள் முதுகுளத்துார், திருவாடானை, ராமநாதபுரம், உட்பட பல ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் தேவகோட்டை வந்து தங்கி புறப்படுகின்றனர்.