/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திராவிட மாடல் ஆட்சியில் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் புண்படுத்தப்படுகின்றன
/
திராவிட மாடல் ஆட்சியில் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் புண்படுத்தப்படுகின்றன
திராவிட மாடல் ஆட்சியில் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் புண்படுத்தப்படுகின்றன
திராவிட மாடல் ஆட்சியில் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் புண்படுத்தப்படுகின்றன
ADDED : ஆக 30, 2025 11:49 PM
சிங்கம்புணரி: ''திராவிட மாடல் ஆட்சியில் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் புண்படுத்தப்படுகின்றன,'' என, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் விநாயகர் சதுர்த்தி விழா பதட்டமாகவே பார்க்கப்படுகிறது.
முஸ்லிம்கள் மத்தியில் தி.மு.க., அரசின் காவல்துறை தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏராளமான போலீசாரை குவித்து பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்றோர் சொந்த மதத்தை இழிவுபடுத்திவிட்டு பிற மதத்தை குளிர்விப்பது மதநல்லிணக்கம் இல்லை.
தான் எந்த மதத்தில், அதன் அடையாளத்தில் உறுதியுடன் இருந்து கொண்டு அனைத்து மதத்தினரையும் மதிக்க கூடியதுதான் உண்மையான மதநல்லிணக்கம்.
விநாயகர்கள் சிலை ஊர்வலம் பெரும்பான்மை ஹிந்துக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்களின் எழுச்சிக்காக நடத்தப்படுகிறது.
இதில் மற்ற மதத்தினருக்கு எந்த பிரச்னையும் இல்லை.
இது பண்டிகை மட்டுமல்ல. ஹிந்து மத அடையாளத்தை மீண்டும் உயிர் பெற செய்வதற்கான முக்கிய விழா.
மதமாற்றத்தால் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே தேசம் பாரதம் தான். அதையும் இழந்து விடுவோமோ என்ற அச்சம் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கும், ஹிந்து தலைவர் களுக்கும் இருப்பதால், அனைவரையும் ஒன்றுப்படுத்தி ஹிந்து எழுச்சிக்காக இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன.
மற்ற மதத்திலும் விழாக்கள் நடத்துவது போல் இதுவும் ஒன்றுதான். மற்ற மத விழாக்களுக்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.
ஆனால் ஹிந்துக்களை மட்டும் நடத்தக் கூடாது எனக்கூறுவது ஏற்க முடியாது.
அனைவருக்குமான அரசை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். கிறிஸ்தவ, முஸ்லிம்களின் ஓட்டு வங்கிக்காக மோடி மீதும், பா.ஜ., மீதும் தி.மு.க.,வினர் வெறுப்பை விதைக்கின்றனர்.
நாட்டில் அனைவரது குரலாக ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் செயல்படுகிறது. அந்த அமைப்பின் கொள்கைகளை முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்பற்ற வேண்டும் என்றார்.