/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் இரவில் பூத்த பிரம்ம கமலம்; ஆச்சரியத்துடன் வழிபட்டு பார்த்து சென்ற பொதுமக்கள்.

ADDED : ஜன 06, 2025 12:14 AM

மானாமதுரை; மானாமதுரை பகுதியில் நேற்று இரவு ஒருவரது வீட்டில் பிரம்ம கமலம் பூ பூத்ததை ஏராளமானோர் ஆச்சர்யத்துடன் பார்த்து வழிபட்டு சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வெள்ளையன் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் நாகு இவரது வீட்டில் ஏராளமான செடிகள் வளர்த்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரம்ம கமலம் பூச்செடியையும் வாங்கி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு முதன்முதலாக அச்செடியில் பூ பூத்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அச்சடிக்கு தீபம் ஏற்றி வழிபட்டடனர். மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் நாகுவின் வீட்டிற்கு வந்து அச்செடியில் பூத்துள்ள பிரம்ம கமல பூவை பார்த்து ஆச்சரியத்துடன் வழிபட்டுச் சென்றனர்.