/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோரத்தில் முளைக்கும் கட்டடம் பாதை இன்றி கைவிடப்படும் விவசாயம்
/
ரோட்டோரத்தில் முளைக்கும் கட்டடம் பாதை இன்றி கைவிடப்படும் விவசாயம்
ரோட்டோரத்தில் முளைக்கும் கட்டடம் பாதை இன்றி கைவிடப்படும் விவசாயம்
ரோட்டோரத்தில் முளைக்கும் கட்டடம் பாதை இன்றி கைவிடப்படும் விவசாயம்
ADDED : மார் 14, 2024 03:38 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் ரோட்டோர புஞ்சை நிலங்களில் விதிகளை மீறி கட்டடங்கள் எழுப்பப்படுவதால் பின்புறம் உள்ள வயல்களின் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக்குறியாகி வருகிறது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியத்தில் ஏராளமான நஞ்சை, புஞ்சை நிலங்கள்உள்ளன. குறிப்பாக ரோட்டோரங்களில் கண்மாய்களை ஒட்டி அதிக பரப்பில் நஞ்சை நிலங்கள் உள்ளன.
ரோடுகளை ஒட்டியுள்ள நிலங்களை சிலர் விவசாயத்துக்கு பயன்படுத்தாமலும் அவற்றில் வீடு, கடை என கட்டடங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் பின்புறம் உள்ள நிலங்களுக்கு விவசாய தேவைகளுக்கு செல்ல வழியில்லாமல் மற்ற விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக டிராக்டர், அறுவடை இயந்திரம் உள்ளிட்டவை பின்புற வயல் பகுதிகளுக்கு செல்ல முடிவதில்லை. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களில் சில ஆண்டுகளாக எந்த சாகுபடியும் செய்யாமல் வீணாகி வருகிறது. நன்செய் நிலங்களில் கட்டுமானங்களை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
இனிவரும் காலங்களில் விவசாய நிலங்களில் விவசாயத்துக்கு இடையூறாக எந்தவொரு கட்டுமானங்களையும் அனுமதிக்க கூடாது. மேலும் பின்னால்உள்ள வயல்களுக்கு வாகனங்கள் வந்து செல்ல உரிய பாதை அமைப்புகளை வருவாய்த்துறையினரும் வேளாண்மை துறையினரும் இணைந்து உருவாக்கித் தர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

