/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குண்டும் குழியுமான கருதுப்பட்டி ரோடு
/
குண்டும் குழியுமான கருதுப்பட்டி ரோடு
ADDED : ஏப் 17, 2025 05:39 AM

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அருகே கருதுப்பட்டி ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.
நாட்டரசன்கோட்டை அருகே உள்ளது கருதுப்பட்டி. இந்த கிராமத்திற்கு தொண்டி ரோட்டில் உள்ள கண்டணிப்பட்டியில் இருந்து கருதுப்பட்டி, நாட்டரசன்கோட்டை வழியாக வாணியங்குடி ரோடு செல்கிறது இந்த பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவகங்கையில் உள்ள பள்ளி கல்லுாரியில் படித்து வருகின்றனர்.
கூலி வேலைக்கு செல்பவர்களும் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் தினமும் சென்று வரவேண்டும். ஆபத்து நேரத்தில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் கூட இந்த பகுதிக்கு வந்து செல்ல முடியாத அளவுக்கு ரோடு சேதமடைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேல் பராமரிக்காமல் உள்ள இந்த ரோட்டை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.