/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண் பயணிகளுக்கு '‛டிமிக்கி' தந்து விட்டு மாலையில் கிளைக்கு செல்லும் பஸ்
/
பெண் பயணிகளுக்கு '‛டிமிக்கி' தந்து விட்டு மாலையில் கிளைக்கு செல்லும் பஸ்
பெண் பயணிகளுக்கு '‛டிமிக்கி' தந்து விட்டு மாலையில் கிளைக்கு செல்லும் பஸ்
பெண் பயணிகளுக்கு '‛டிமிக்கி' தந்து விட்டு மாலையில் கிளைக்கு செல்லும் பஸ்
ADDED : நவ 02, 2025 10:32 PM

சிங்கம்புணரி:  சிங்கம்புணரி அருகே கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அரசு டவுன் பஸ் பயணிகளுக்கு டிகிக்கி கொடுத்துவிட்டு போக்குவரத்து கழக கிளைக்கு செல்வது வாடிக்கையாகி வருகிறது.
இவ்வொன்றியத்தில் செருதப்பட்டி பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கொரொனா காலத்தில் நிறுத்தப்பட்டது.  மீண்டும் இயக்காதது குறித்து தினமலரில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து கடந்த 2023 மே மாதம் அமைச்சர் பெரியகருப்பன் பேருந்தை மீண்டும் தொடக்கி வைத்தார்.
காலை, மாலை இருமுறை இந்த பஸ் செருதப்பட்டி சென்று திரும்ப வேண்டும். ஆனால் சில மாதங்களாக மாலை 6:50 மணிக்கு கிராமத்துக்கு செல்லாமல் பஸ் ஸ்டாண்டிலேயே கதவுகளை பூட்டி நிறுத்திவிட்டு கிளைக்கு எடுத்துச்செல்வதாக பயணிகள் குற்றம் சாற்றினர். இந்நிலையில் நவ. 1 ஆம் தேதி மாலை பஸ் ஸ்டாண்டு வந்து, பஸ்ஸின் கதவுகளை அடைத்து விட்டு பயணிகளை ஏற்றாமல், அதே பஸ்சை திருப்புத்தூருக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கிருந்தவர்கள் வீடியோ எடுப்பதை பார்த்த டிரைவர் செருதப்பட்டு செல்வது போல் பெரிய கடை வீதியில் வளைந்து, வேறு பாதையில் சென்றுவிட்டு சிறிது தூரத்தில் மீண்டும் திருப்பிக் கொண்டு கிளை அலுவலகத்திற்கு சென்றுவிட்டது.
இலவச பேருந்து என்பதாலும் பெண்கள் அதிக அளவில் பயணிப்பதாலும் பஸ்சுக்கு வருமானம் இல்லாததால் செருதப்பட்டிக்கு இயக்குவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பயணிகளை ஏமாற்றி வழித்தடம் மாற்றி பஸ்சை இயக்குவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், முறையாக பஸ்சை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

