/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் முன்பகை காரணமாக ஓட ஓட விரட்டி இளைஞர் கொலை: மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு
/
சிவகங்கையில் முன்பகை காரணமாக ஓட ஓட விரட்டி இளைஞர் கொலை: மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கையில் முன்பகை காரணமாக ஓட ஓட விரட்டி இளைஞர் கொலை: மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கையில் முன்பகை காரணமாக ஓட ஓட விரட்டி இளைஞர் கொலை: மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு
ADDED : நவ 02, 2025 10:52 PM

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று முன் தினம் இரவு முன்பகை காரணமாக இளைஞரை ஓட ஓட விரட்டி எட்டு பேர் கும்பல் கொலை செய்தது. அச்சம்பவத்தின் அச்சம் மறைவதற்குள் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நேரு பஜாரில் ஒருவரை வெட்டிவிட்டு மர்மகும்பல் தப்பியது.
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் ராஜேஷ் 19. இவர் சென்னை ஓட்டலில் வேலை செய்தார். கடந்த மாதம் விடுமுறைக்காக சிவகங்கை வந்த ராஜேஷூக்கும், தொண்டி ரோடு மதியழகன் மகன் அருண்பாண்டிக்கும் விரோதம் இருந்தது.
இந்நிலையில் அக்., 31 இரவு அருண்பாண்டியன் நண்பரின் டூவீலரை ராஜேஷ் தரப்பினர் சேதப்படுத்தினர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அன்று ராஜேைஷ கண்டித்த அவரது பெற்றோர் சென்னைக்கு செல்லுமாறு தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு சென்னை செல்ல சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நின்ற ராஜேைஷ டூவீலர்களில் சென்ற 8 பேர் கும்பல் வாளால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. ராஜேஷின் தாய் சரஸ்வதி போலீசில் அருண்பாண்டி தலைமையிலான கும்பல் தான் கொலை செய்ததாக புகார் அளித்தார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தின் அச்சம் மறைவதற்கு முன்பாகவே நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நேரு பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஒலி முகமதுவை 31, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி தப்பியது. இதில் பலத்த காயமுற்ற அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரணையில் முன்பகை காரணமாக அரசனேரி கீழமேட்டைச் சேர்ந்த சேகர் மகன் அரவிந்தன் உட்பட சிலர் ஒலிமுகமதுவை வெட்டி விட்டு தப்பியது தெரிய வந்தது. சிவகங்கையில் குற்றச்சம்பவங்கள் தொடர்வது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

