/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு
/
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு
ADDED : நவ 02, 2025 11:00 PM
ஆண்டிபட்டி: சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 2000 கன அடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறு மூலம் நீர்வரத்து கிடைக்கும். தேனி மாவட்டத்தில் சில வாரங்களில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் அக்.,27ல் 70.24 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக அக்.,27ல் திறக்கப்பட்ட நீர் நேற்று முன் தினம் நிறுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2000 கனஅடி வீதம் நேற்று காலை 10:00 மணிக்கு ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு நவ.,6ல் நிறுத்தப்படும்.
நேற்று அணை நீர்மட்டம் 69.03 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1148 கன அடி. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1280 கன அடி, 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி, குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி, என மொத்தம் வினாடிக்கு 3499 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

