/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்தது
/
கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்தது
ADDED : டிச 08, 2024 12:11 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பிரமனுார் கால்வாயின் தடுப்புச்சுவர் இடிந்ததில், துாய்மை பணியாளர்களின் மூன்று வீடுகள் சேதமடைந்ததை தொடர்ந்து கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் வாயிலாக சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
வைகை ஆற்றில் தட்டான்குளம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டு, அதில் இருந்து வலது பிரதான கால்வாய் பிரமனுார் கண்மாய் வரை 7 கி.மீ., துாரத்திற்கு கட்டப்பட்டது.
இதில் திருப்புவனம் நகர் வழியாக செல்லும் 3 கி.மீ., துாரமுள்ள கால்வாய்க்கு இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த தடுப்புச்சுவர் வலுவிழந்து இருப்பதாக விவசாயிகள் பலமுறை புகார் அளித்திருந்தனர். மேலும் கால்வாய் துார்வாரப்படாததால், தடுப்புச்சுவர் சேதமடையும் அபாயம் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பிரமனுார் கால்வாயிலும் இரு நாட்களாக தண்ணீர் சென்றபடி உள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு திருப்புவனம் திதி பொட்டல், பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் குடியிருப்பின் பின்புறம் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து கால்வாயில் விழுந்தது.
இதனால், தண்ணீர் செல்ல முடியாமல் கால்வாயின் இடதுபுற தடுப்புச்சுவரின் இடைவெளி வழியாக சீறிப்பாய்ந்து வைகை ஆற்றில் சென்றது.