/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறுகிய பாலத்தால் தொடரும் அபாயம்
/
குறுகிய பாலத்தால் தொடரும் அபாயம்
ADDED : ஆக 18, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: திருப்புத்துாரில் இருந்து பிள்ளையார்பட்டி குன்றக்குடி வழியாக பள்ளத்துார் செல்லும் சாலை சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் சாலையாக உள்ளது.
சின்ன குன்றக்குடி அருகே 30 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பாலம் மிகக் குறுகியதாக உள்ளது.
தற்போது இப் பாலத்தின் இருபுறமும் சாலை அகலப்படுத்தப்பட்ட நிலையில், பாலம் அகலப்படுத்தப் படவில்லை. கனரக வாகனங்கள் செல்லும்போது நின்று செல்ல வேண்டி உள்ளது. தவிர, இரவு நேரங் களில் விபத்து அபாயம் நிலவுகிறது.