/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நுாறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள் விவரங்களை பதிவேற்ற முடியாமல் தவிப்பு
/
நுாறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள் விவரங்களை பதிவேற்ற முடியாமல் தவிப்பு
நுாறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள் விவரங்களை பதிவேற்ற முடியாமல் தவிப்பு
நுாறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள் விவரங்களை பதிவேற்ற முடியாமல் தவிப்பு
ADDED : பிப் 18, 2025 05:11 AM
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் நுாறு நாள் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணி புரிபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 319 வரை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்காக இத்திட்டத்தின் பணியாற்றுபவர்களே ஊராட்சிகளில் பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஊராட்சியில் பணிபுரியும் நுாறு நாள் பணியாளர்களுக்கேற்ப ஒன்று அல்லது மூன்று பேர் வரை பெரும்பாலும் பெண் பணியாளர்களே பொறுப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினம்தோறும் 100 நாள் பணிக்கு வருபவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும் வாரந்தோறும் புதன்கிழமை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று வருகை பதிவேட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது தினமும் காலை பணிக்கு வருபவர்களின் வருகை பதிவேடு மற்றும் பல்வேறு விவரங்களை உடனுக்குடன் பல்வேறு வசதிகள் கொண்ட ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் தான் பணியாளர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பணி நடைபெறும் இடங்களையும் அவ்வப்போது தொலைபேசிகளில் போட்டோ எடுத்தும் பதிவேற்றம் செய்ய கூறுவதால் பணித்தள பொறுப்பாளர்கள் தாங்கள் வாங்கும் குறைந்த சம்பளத்தில் நவீன அலைபேசி வாங்க முடியாமல் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை, இளையான்குடி பணித்தள பொறுப்பாளர்கள் கூறியதாவது:
ஏற்கனவே நாங்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது அலைபேசிகளில் தினந்தோறும் நடைபெறும் பணிகளையும், வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அதிவேகம் கொண்ட இன்டர்நெட்டும் பயன்படுத்த வேண்டியுள்ளது.
நாங்கள் வைத்திருக்கும் அலைபேசிகளில் வசதிகள் இல்லாததால் இந்த பணியை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. ஆகவே தமிழக அரசு அனைத்து பணித்தள பொறுப்பாளர்களுக்கும் அலைபேசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

