/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்
/
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்
ADDED : செப் 08, 2025 06:22 AM
சிவகங்கை : ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என்பதால் விண்ணப்பத்தில் சில குளறுபடி இருப்பதால் அவற்றை சரி செய்து விண்ணப்பிக்க தேதி நீடிப்பு செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, 10ஆம் வகுப்பு முடித்த பின் பிளஸ் 2 ஆசிரியர் பயிற்சி தொழில் கல்வியாக படித்து இடைநிலை ஆசிரியராக அரசு பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்பதால் ஆசிரியர் தகுதி தேர்வு தாளுக்கு விண்ணப்பிக்கும் போது 10ஆம் வகுப்பு, பிளஸ் 2வில் ஆசிரியர் பயிற்சி படித்தமைக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை. 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி என பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு மேல்நிலை வகுப்பில் ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலவில்லை.
போதிய இடைநிலை ஆசிரியர் இல்லாததால் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் கடந்த 1998 க்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிக்காததால் தகுதித் தேர்வு தாள் 1 விண்ணப்பிக்க இயலவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் தகுதி தேர்வு தாள் 1 விண்ணப்பிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இணையதள விண்ணப்பத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்து அனைவரும் விண்ணப்பிக்க ஏதுவாக கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என்றனர்.