/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையை வளர்ப்பதில் தி.மு.க., ஆட்சிக்கு பங்கு உண்டு
/
சிவகங்கையை வளர்ப்பதில் தி.மு.க., ஆட்சிக்கு பங்கு உண்டு
சிவகங்கையை வளர்ப்பதில் தி.மு.க., ஆட்சிக்கு பங்கு உண்டு
சிவகங்கையை வளர்ப்பதில் தி.மு.க., ஆட்சிக்கு பங்கு உண்டு
ADDED : ஜன 23, 2025 04:18 AM
சிவகங்கை: சிவகங்கையை வளர்ப்பதில் தி.மு.க., ஆட்சிக்கு பங்கு உண்டு என சிவகங்கையில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் 53,039 பயனாளிகளுக்கு ரூ.169 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
சிவகங்கையை வளர்ப்பதில் தி.மு.க., ஆட்சிக்கு மிக பெரிய பங்கு உண்டு. கடந்த தி.மு.க., ஆட்சியில் சிவகங்கை, திருப்புத்துார், நெற்குப்பை,இளையான்குடி, கல்லல், காளையார்கோவில் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.616 கோடியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம், சிவகங்கை மருத்துவ கல்லுாரி, 55 கோயில்களில் ரூ.14 கோடியில் திருப்பணி, இளையான்குடியில் சார்பதிவாளர், நீதிமன்றம், மாணவர் விடுதி, அரசு மருத்துவமனை விரிவாக்கம், பைபாஸ் ரோடு, சிவகங்கையில் நீதிமன்றம், மாணவர் விடுதி, பள்ளி கட்டடம், மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை, புதிய நகராட்சி கட்டடம், மகளிர் கல்லுாரி என வளர்ச்சி பணிகளை அடுக்கி கொண்டே போகலாம்.
இம்மாவட்டத்தில் மட்டுமே மகளிர் உரிமை தொகை 2 லட்சத்து 38 ஆயிரத்து 438 பேருக்கு வழங்கியுள்ளோம்.புதுமை பெண் திட்டத்தில் 7210 மாணவிகள், தமிழ்புதல்வன் திட்டத்தில் 6076 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மகளிர் சுய உதவி குழு கடனாக ரூ.855 கோடி தந்துள்ளோம். காலை உணவு திட்டம் மூலம் 37,000 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 12 லட்சம் பேரும், காப்பீடு திட்டம் மூலம் 1.34 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். முதியோர் 62 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியமும், 27,995 பேருக்கு வீட்டு மனை பட்டா தரப்பட்டுள்ளது. 23,525 பேரின் நகை கடன் தள்ளுபடி ஆனது. விவசாயிகள் 24,963 பேர் பயிர் கடன் பெற்றுள்ளனர். பல்வேறு திட்டம் மூலம் 8 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
இம்மாவட்டத்தில் மூன்றரை ஆண்டில் மட்டுமே 91,265 பேர்களுக்கு ரூ.38.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி பெற்றுள்ளனர். சிவகங்கையில் ரூ.89 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டடம், ரூ.50 கோடியில் திருப்புத்துாரில் புறவழிச்சாலை திட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு ரூ.30 கோடியில் புதிய கட்டடம் என புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றார்.
முன்னதாக கலெக்டர் ஆஷா அஜித் வரவேற்றார். அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கோவி.செழியன், கார்த்தி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, காதர்பாட்சா உட்பட அரசுத்துறை செயலர்கள், மாவட்ட அதிகாரிகள், பயனாளிகள் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின், கீழடி அருங்காட்சியம், மகளிர் தயாரித்த கைவினை பொருள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டார். பின்னர் ரூ.376.49 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்தும், ரூ.134 கோடி மதிப்பில் 33 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி நன்றி கூறினார்.

