/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இஸ்லாமியர்களை அச்சுறுத்தி தி.மு.க., பலனடைய பார்க்கிறது
/
இஸ்லாமியர்களை அச்சுறுத்தி தி.மு.க., பலனடைய பார்க்கிறது
இஸ்லாமியர்களை அச்சுறுத்தி தி.மு.க., பலனடைய பார்க்கிறது
இஸ்லாமியர்களை அச்சுறுத்தி தி.மு.க., பலனடைய பார்க்கிறது
ADDED : பிப் 11, 2025 05:03 AM
காரைக்குடி: 'இஸ்லாமியர்களை அச்சுறுத்தி 2026 தேர்தலில் தி.மு.க., பலனடைய பார்க்கிறது. தி.மு.க.,வின்சதியை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,' என பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றுள்ள பாண்டித்துரையை பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் ஹிந்துக்களுடைய புனித இடம். தர்கா வழிபாட்டை பா.ஜ., ஒரு போதும் எதிர்க்கவில்லை. இஸ்லாமியர்களை அச்சுறுத்தி 2026 தேர்தலில் தி.மு.க., பலனடைய பார்க்கிறது. தி.மு.க., வின் இந்த சதியை தமிழக மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் பா.ஜ., அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
தி.மு.க.,வின் தவறான வழிகாட்டுதலில் இஸ்லாமியர்கள் பணிந்து ஆடு அறுப்போம், கோழி வெட்டுவோம் என்று புனிதமிக்க மலையை கறை படிய செய்தால், அது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்துவதோடு நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும்.
2026 தேர்தல் என்பது ஒன்றுபட்ட பாரதத்தை உருவாக்குவதோடு, ஊழல் இல்லாத தமிழகத்தையும் உருவாக்க வேண்டும் என்பதையே நாங்கள் முடிவாக கொண்டிருக்கிறோம் என்றார்.