/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வீர அழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
/
மானாமதுரை வீர அழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
மானாமதுரை வீர அழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
மானாமதுரை வீர அழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
ADDED : ஜூலை 31, 2025 10:52 PM

மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று அதிகாலை துவங்கியது.
சுவாமிகள் அலங்காரத்துடன் கோயில் முன் மண்டபத்தில் வீர அழகர் ஸ்ரீதேவி பூதேவியருடன் எழுந்தருளினார். தொடர்ந்து அர்ச்சகர்கள் கோயில் கொடி மரத்துக்கு அபிஷேக ஆராதனை பூஜை நடத்திய பின்பு கொடியேற்றம் நடைபெற்றது.
விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகபடிக்கு எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். திருக்கல்யாணம் ஆக.5,8ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேரோட்டம், 9ம் தேதி தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற உள்ளது.