/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அலங்கார அன்னை சர்ச் திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது ஆக., 14 ல் தேர்பவனி
/
அலங்கார அன்னை சர்ச் திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது ஆக., 14 ல் தேர்பவனி
அலங்கார அன்னை சர்ச் திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது ஆக., 14 ல் தேர்பவனி
அலங்கார அன்னை சர்ச் திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது ஆக., 14 ல் தேர்பவனி
ADDED : ஆக 07, 2025 05:23 AM

சிவகங்கை : சிவகங்கை அலங்கார அன்னை சர்ச் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கையில் மதுரைரோட்டில் உள்ள அலங்கார அன்னை சர்ச் திருவிழாவை நேற்று மாலை 6:05 மணிக்கு பாதிரியார் ஜெபமாலை சுரேஷ் கொடியேற்றி துவக்கி வைத்தார்.
முன்னதாக அலங்கார அன்னையின் உருவம் பதித்த கொடியை ஏந்தி, கிறிஸ்தவர்கள் சர்ச் வளாகத்தை வலம் வந்தனர்.
கொடியேற்றத்திற்கு பின் மறைமாவட்ட துறவியர் அமைப்பு தலைவர் செல்வக்குமார் திருப்பலியை நடத்தினார்.
திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறும். மரியபாக்கியநாதன், அமைதி இல்ல குழுமம், அந்தோணிச்சாமி, ஆயர் இல்ல குழுமம், ஆர்.எஸ்.,மங்கலம் மறைவட்ட அதிபர் தேவசகாயம், ஆனந்தா கல்லுாரி குழுமம், வியான்னி அருட்பணி மைய குழுமத்தினர் சார்பில் சிறப்பு திருப்பலி நிகழ்வு நடைபெறும்.
ஆக., 10 ம் தேதி மாலை 6:00 மணிக்கு புனித ஜஸ்டின் பள்ளி வளாகத்தில் திருப்பலி, சர்ச் நோக்கி நற்கருணை பவனி நடைபெறும். ஆக., 14 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்துஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலிக்கு பின் தேர்பவனி நடைபெறும்.
ஆக., 15 அன்று காலை 8:30 மணிக்கு நன்றி திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். பாதிரியார் ஸ்டீபன் தலைமையில் பங்கு இறைமக்கள், பேரவையினர் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.