/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லி ஜல்லியாக பெயர்ந்த தரைப்பாலம் ரூ.2.31 கோடி செலவழித்தும் வீணானது
/
ஜல்லி ஜல்லியாக பெயர்ந்த தரைப்பாலம் ரூ.2.31 கோடி செலவழித்தும் வீணானது
ஜல்லி ஜல்லியாக பெயர்ந்த தரைப்பாலம் ரூ.2.31 கோடி செலவழித்தும் வீணானது
ஜல்லி ஜல்லியாக பெயர்ந்த தரைப்பாலம் ரூ.2.31 கோடி செலவழித்தும் வீணானது
ADDED : டிச 05, 2025 05:50 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே சாத்தனியில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் ஜல்லி ஜல்லியாக பெயர்ந்து முழுவதும் சேதம் அடைந்திருப்பதால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
சிவகங்கை அருகே அல்லுார் முதல் பனங்காடி வழியாக சாத்தனி வரை 3 கிலோ மீட்டர் துாரம் தார் சாலை ரூ.2 கோடியே 31 லட்சத்து 59 ஆயிரத்திற்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணி 2024 செப்.12ல் துவங்கி கடந்த ஜூன் 11ல் முடிந்தது. இந்த சாலையில் 7 சிறுபாலம் ஒரு தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சாலையை வரும் 2030 வரை 5 ஆண்டு பராமரிக்க வேண்டும். பராமரிப்பிற்காக நிதி ஒதுக்கப்படுகிறது.
2025 முதல் 2026 வரை பராமரிப்பிற்கு ரூ1.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மழை முடிந்த பிறகு புற்களை அகற்ற வேண்டும். மண் அரிப்பை சரிசெய்ய வேண்டும். தார் சாலையில் உள்ள குழிகள் மற்றும் வெடிப்புகளை பராமரிக்க வேண்டும்.
இந்த சாலை அமைத்து ஒரு வருடம் முடிவதற்குள் கனரக வாகனங்கள் சென்றதால் சாத்தனி அருகே உள்ள சிமென்ட் தரைப்பாலம் முழுவதும் சேதம் அடைந்து ஜல்லி ஜல்லியாக பெயர்ந்து காணப்படுகிறது. கிராம மக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்கிறது.
இந்த பகுதி கிராவல் குவாரி வாகனங்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதியில் உள்ள கட்டுமானப்பணிக்கு மண் கொண்டு செல்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சேதம் அடைந்துள்ள இந்த தரைப்பாலத்தை சரிசெய்யவும், கிராமச்சாலையில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

