/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
/
பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
ADDED : டிச 29, 2025 06:45 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.
சிவகங்கை: சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை காலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். உற்ஸவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருள்வார்.
நாளை காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசலில் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வார். இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடுநடைபெறும்.
தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமர் கோயிலில் நாளை காலை 4:00 மணிக்கு பூஜைகளுக்கு பின் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
ரங்கநாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அதிகாலை 4:30 மணி அளவில் ரங்கநாத பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருள்கிறார்.
மாலையில் இரண்டு கோயில்களிலும் சுவாமி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருப்புத்துார்: ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில், நாளை காலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.
அதனை தொடர்ந்து உற்ஸவராக ஸ்ரீதேவி, பூதேவியருடன் நாராயண பெருமாள் எழுந்தருள் வார். காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

