/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மனைவி, மாமனார், மாமியார் உட்பட 4 பேருக்கு வெட்டு; பணப்பிரச்னையில் கணவர் ஆத்திரம்

ADDED : டிச 07, 2024 08:10 AM
சிவகங்கை : சிவகங்கை அருகே நாடமங்கலத்தில் பணப்பிரச்னையில் மனைவி, மாமனார், மாமியார், அண்ணியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடுகின்றனர்.
மானாமதுரை அருகே கிளங்காட்டூர் அழகர்சாமி 40. இவருக்கும் நாடமங்கலம் சமரசத்தின் 2வது மகள் ரமணிதேவிக்கும் 30, பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் குழந்தை உள்ளது. அழகர்சாமி சில ஆண்டுகளாக சவுதியில் பணிபுரிந்தார். அங்கு சம்பாதித்த ரூ.பல லட்சத்தை மனைவிக்கு அனுப்பி வந்தார்.
கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த அழகர்சாமி மனைவியிடம் அனுப்பிய பணம் குறித்து விசாரித்தார். அதற்கு ரமணிதேவி அழகர்சாமியின் அம்மா, அக்காவிடம் கொடுத்துள்ளதாக கூறினார். இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டதால் நாடமங்கலத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு ரமணிதேவி சென்றார்.
டிச., 5 இரவு 10:30 மணிக்கு அரிவாளுடன் சமரசம் வீட்டிற்கு சென்ற அழகர்சாமி, ரமணிதேவி, அவரது அக்கா கற்பூரசுந்தரி 32, தந்தை சமரசம் 60, தாய் அய்யம்மாளை 53, அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார்.
பலத்த காயமுற்ற 4 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார் தப்பிய அழகர்சாமியை தேடுகின்றனர்.