ADDED : அக் 31, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் 5 நடைமேடைகள் உள்ளன. இங்கு 30க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன.காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ. 13.57 கோடி மதிப்பீட்டில், லிப்ட், எஸ்கலேட்டர், இருக்கை, நுழைவு வாயில், பார்க்கிங் வசதிகள் அமைய உள்ளன.
நுழைவுவாயில் அமைக்கும் பணி பல மாதங்கள் நடந்த நிலையில் தற்போது முழுமை அடைந்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் நடைமேடை,அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தெற்கு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மூன்று படிக்கட்டுகளை ஒட்டி 3 லிப்ட் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
தற்போது இப்பணிகள் முடிந்து பயணிகளின் வசதிக்காக லிப்ட் இயக்கப்பட்டு வருகிறது.

