/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் எழுந்தருளிய பெருமாள்
/
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் எழுந்தருளிய பெருமாள்
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் எழுந்தருளிய பெருமாள்
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் எழுந்தருளிய பெருமாள்
ADDED : ஆக 25, 2025 05:52 AM

மானாமதுரை : மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் எழுந்தருளியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதல் ஜீவ ஒடுக்கமான இடத்தில் கோயில் உள்ளது.
திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ராமலிங்க விலாசத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதப் பெருமாள் பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு திருக்கூடல் மலையிலிருந்து கடந்த 9ம் தேதி நவநீதப் பெருமாள் புறப்பாடாகி மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரையில் மண்டகப்படியில் எழுந்தருளினார்.
நேற்று முன்தினம் இரவு கட்டிகுளம் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு எழுந்தருளிய நவநீத பெருமாளுக்கு மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் வரவேற்பு அளித்து, தரிசனம் செய்தனர்.