ADDED : பிப் 18, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் திலீப்குமார் 26. கோவையில் கனரக வாகன ஓட்டுநராக வேலைபார்த்து வந்தார்.
பிப்.16ல் சிங்கம்புணரியில் இருந்து டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊருக்கு திரும்பிய போது ஓசாரிபட்டி அருகே நிலைதடுமாறி ரோட்டோர பள்ளத்தில் விழுந்ததில் இறந்தார். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

