/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிற்காமல் சென்ற காரை துரத்திய போலீசார்
/
நிற்காமல் சென்ற காரை துரத்திய போலீசார்
ADDED : டிச 17, 2024 03:54 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வாகன சோதனையில் நிற்காமல் சென்ற காரை போலீசார் விரட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் திருப்புத்துார் சிங்கம்புணரிரோட்டில் எஸ்.ஐ., ஸ்ரீதர் டிச.15ம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்ற போது, டிரைவர் காரை நிறுத்தாமல் பேரிகார்டுகளில் மோதிவிட்டு வேகமாக சென்றார். உடனே ஸ்ரீதர் சிங்கம்புணரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து செக்போஸ்டில் வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளார்.
சிங்கம்புணரி போலீசார் சேவுகப்பெருமாள் கோயில் அருகே காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அங்கும் நிற்காமல் சென்ற கார், சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் அருகே லாரி மற்றும் பேரிக்கார்டு மீது மோதி நிற்காமல் சென்றது.
சிங்கம்புணரி எஸ்.ஐ., சபரிதாசன் உள்ளிட்ட 4 போலீசார் இரண்டு டூவீலர்களில் காரை விரட்டினர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வரை சென்ற நிலையில், கார் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பக்கமாக வேகமாக சென்று விட்டது.
விசாரணை நடத்திய போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட காரையும் அதிலிருந்தவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். கார் எதற்காக நிற்காமல் சென்றது, காரில் ஏதேனும் கடத்தல் பொருட்கள் இருந்ததா, வேறு ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பது தெரியவில்லை.