/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எச்சரிக்கை பலகையை மீறி குப்பை கொட்டும் அவலம்
/
எச்சரிக்கை பலகையை மீறி குப்பை கொட்டும் அவலம்
ADDED : நவ 07, 2025 04:00 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், வடகரை, கலுங்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. தினசரி இப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை வைகை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கொட்டி மாசுபடுத்து வருவதுடன் இரு நாட்களுக்கு ஒரு முறை குப்பைக்கு தீ வைத்து சுற்றுப்புற சூழலையும் மாசுபடுத்தி வருகின்றனர்.
திருப்புவனம் வடகரை ஆண்கள் பள்ளி அருகிலும், புதுார் செல்லும் வைகை ஆற்றுப்பாதையிலும் குப்பை கொட்டி அடிக்கடி தீ வைத்து வருகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக மடப்புரத்தில் இருந்து வைகை ஆற்றப்படுகை பாலம் அருகே குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் அருகே குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் குழாய் சேதமடைந்து வருவதுடன் குடிநீரின் சுவையும் மாறி விடுகிறது.
கிராம மக்கள் கூறுகையில் : ஊராட்சி நிர்வாகம் தான் குப்பைகொட்டி தீ வைத்தது. அவர்களே குப்பைகளை கொட்டி விட்டு அவர்களே எச்சரிக்கை போர்டுவைத்து வருகின்றனர். அக்கறை இருந்திருந்தால் குப்பைகளை சேகரித்து மக்கும், மக்காத குப்பை என ஊராட்சி நிர்வாகம் தரம் பிரிக்கும் மையம் அமைத்து குப்பைகளை தரம் பிரித்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனை விடுத்து போர்டு வைப்பதால் எந்த பயனும் இல்லை, என்றனர்.

