/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இணைய சேவைக்கு பணம் நிலுவை கணினி வழி கல்விக்கு வந்தது சிக்கல்
/
இணைய சேவைக்கு பணம் நிலுவை கணினி வழி கல்விக்கு வந்தது சிக்கல்
இணைய சேவைக்கு பணம் நிலுவை கணினி வழி கல்விக்கு வந்தது சிக்கல்
இணைய சேவைக்கு பணம் நிலுவை கணினி வழி கல்விக்கு வந்தது சிக்கல்
ADDED : ஜன 17, 2025 12:43 AM
சிவகங்கை:அரசு தொடக்கப்பள்ளிகளில் இணைய சேவைக்கு 4 மாதங்களாக அரசு பணம் செலுத்தாததால் கணினி வழி கல்வி அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 24,291 தொடக்கப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்பஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை வசதி உள்ளது. ஆசிரியர்களுக்கு டேப்லெட்எனப்படும் கையடக்க கணினியும் வழங்கப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைபயன்பாட்டிற்கு இணைய வசதி அவசியம். ஆனால் பல பள்ளிகளில் இணைய வசதி இல்லை. இணைய வசதி உள்ள பள்ளிகளில்கடந்த 4 மாதமாக இணைய வசதிக்கான பணம் தலைமையாசிரியர் வங்கி கணக்கிற்கு பள்ளி கல்வித்துறைஒதுக்கீடு செய்யவில்லை.
இந்நிலையில் பிப்.முதல் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் கணினியுடன் கூடிய கற்றல், கற்பித்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இணைய வசதி இல்லாத பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்திகொடுத்தால் மட்டுமே இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும்.
முதலில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இணைய வசதிக்குகட்டவேண்டிய பணத்தை தலைமையாசிரியர் வங்கி கணக்கிற்கு செலுத்தி இணைய வசதி தொடர்ந்து கிடைக்கநடவடிக்கை எடுத்தால் மட்டுமே கணினி வழி கல்வியை அமல்படுத்த முடியும்என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.