/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாத்தனி மயானத்திற்கு ரோடு வசதியின்றி அவதி
/
சாத்தனி மயானத்திற்கு ரோடு வசதியின்றி அவதி
ADDED : அக் 14, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பனங்காடி அருகே சாத்தனியில் ரோடு வசதியின்றி சேரும், சகதியான ரோட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர்.
இக்கிராமத்தில் 150 குடும்பம் வரை வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கான மயானம் 2 கி.மீ., துாரத்தில் உள்ளது. கிராமத்தில் இருந்து மயானத்திற்கு ரோடு வசதிகள் இல்லை. இதனால் மழைக் காலத்தில் நடைபாதையில் மழை நீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கின்றன. நேற்று இந்த பாதையில் இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர்.
எனவே சாத்தனி கிராமத்திற்கும், மயா னத்திற்கும் இடையே ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.