ADDED : ஜூலை 10, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் பயிரிடப்பட்ட கடலை மழை இல்லாமல் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இவ்வொன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மானாவாரியாக கடலை சாகுபடி செய்துள்ளனர். ஆனிப் பட்டத்தில் விதைக்கும் இப்பயிர் தீபாவளியை ஒட்டி அறுவடைக்கு வரும். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இப்பகுதி மக்கள் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
15 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த மழையை நம்பி மேலவண்ணாரிருப்பு, கீழவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, கல்லங்களப்பட்டி, மின்னமலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கடலை விதைத்தனர். செடிகள் முளைத்து வரும் நிலையில் அடுத்த மழை பெய்யாததால் அனைத்து பயிர்களும் காயத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.