ADDED : நவ 19, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து ஆயத்தீர்வை உதவி ஆணையர் ரங்கநாதன் கோட்ட ஆய அலுவலர் ரத்தினவேல் பாண்டியன், இளையான்குடி தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் முத்துராமலிங்கம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள்,போலீசார் இளையான்குடி முதலியார் தெருவில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
நவாப் என்பவருக்கு சொந்தமான கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் 2 லிட்டர் இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்து புகையிலை பொருட்களை இளையான்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

