/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோரத்தில் கொட்டும் கோழிக் கழிவால் துர்நாற்றம்
/
ரோட்டோரத்தில் கொட்டும் கோழிக் கழிவால் துர்நாற்றம்
ADDED : ஜூலை 05, 2025 12:33 AM

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே ரோட்டோரத்தில் மழைநீர் காய்வாயில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இவ்வொன்றியத்தில் சிவபுரிபட்டி ஊராட்சி அரசினம்பட்டி அருகே ரோட்டோரத்தில் உள்ள மழைநீர் கால்வாயில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கோழிக் கழிவுகளை தொடர்ந்து கொட்டுகின்றனர். அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
கல்லம்பட்டி, ஈழுவாண்டிபட்டி, அரசினம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். சுற்றுசசூழல் மாசு காரணமாக அவ்வழியாக செல்லும் மாணவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.