/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்களை பதம் பார்க்கும் கற்கள் பாதியில் நிற்கும் பணியால் அவதி
/
கால்களை பதம் பார்க்கும் கற்கள் பாதியில் நிற்கும் பணியால் அவதி
கால்களை பதம் பார்க்கும் கற்கள் பாதியில் நிற்கும் பணியால் அவதி
கால்களை பதம் பார்க்கும் கற்கள் பாதியில் நிற்கும் பணியால் அவதி
ADDED : ஜூலை 24, 2025 06:38 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் பிரான்மலை ஊராட்சி கோபாலபுரம் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் நடந்து செல்ல வசதியாக 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு கடந்தாண்டு பணி துவங்கிய நிலையில் தொடர்ந்து பணி எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாணவர்கள் நடந்து செல்லும் பாதையில் கற்கள் பரப்பப்பட்டு ஆறு மாதங்களாக எந்த வேலையும் நடைபெறவில்லை.
இதனால் கரடு முரடான கற்களில் மாணவர்கள் நடந்து செல்லும் போதும், விளையாடும்போதும் கால்களில் காயம் பட்டு அவதிப்படுகின்றனர். இதே போல் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி முன்புறமும் பேவர் பிளாக் அமைக்க கற்கள் பரப்பப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அங்கு வரும் குழந்தைகளும் பெற்றோர்களும் அவதிக்கு உள்ளாகின்றனர். பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் சிரமத்தை போக்க வேண்டும்.